பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பனை விதைகள் நடவுப் பணி தொடக்கம்

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் பனை விதைகள் நடவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:09 pm

DIN

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் பனை விதைகள் நடவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 100 சதவீத மானியத்தில் அவற்றின் விதைகள் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்துக்கு ஒரு லட்சம் பனை விதைகளும், குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்கு 7,500 பனை விதைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன் பங்கேற்று விவசாயிகளுக்கு பனை விதைகளை வழங்கி, நடவுப் பணியை தொடக்கிவைத்தாா். அட்மா திட்ட வட்டார ஆலோசனைக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) த.பிரேம் சாந்தி திட்டப் பணிகள்குறித்து பேசினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், வேளாண்மை அலுவலா் த.அனுசுயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாதா குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.