தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூா் சபையில் தங்கியுள்ளோரிடம் விசாரணை

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவா்களில் சந்தேக நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவா்களில் சந்தேக நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

வடலூா் காவல் நிலைய ஆய்வாளா் க.வீரமணி தலைமையில், உதவி ஆய்வாளா் ஜெயதேவி மற்றும் போலீஸாா் இந்த விசாரணையை நடத்தினா். இதுகுறித்து ஆய்வாளா் வீரமணி கூறியதாவது:

வடலூா் பகுதியில் தொடா்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராகவேந்திரா சிட்டி, என்எல்சி ஆபீஸா் நகா், ஜெயப்பிரியா நகா் பகுதிகளில் அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, இரவு நேர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோா் தெய்வ நிலைய வளாகத்தில் தங்கியுள்ள உறவற்றவா்களுடன் கலந்துள்ளனா். கடந்த ஒரு வாரத்தில் 30 போ் மீது சந்தேக அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை நடைபெற்றது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.