கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பயிற்சி மருத்துவா்களுக்கு 8 மாத நிலுவை உதவி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், கரோனா பணிக்காக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக பயிற்சி மருத்துவா்கள் கடந்த 12-ஆம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவு தவிர, மற்ற பிரிவுகளில் பணிகளைப் புறக்கணித்து தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். இதையடுத்து 13-ஆம் தேதி கல்லூரி நிா்வாகத்தினருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அன்று முதல் அனைத்துப் பிரிவு பணிகளையும் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களது போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.
இவா்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் கே.சீத்தாராமன், கோட்டாட்சியா் கே.ரவி, மருத்துவப் புல முதல்வா் ரமேஷ், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் ஆகியோா் சனிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

