மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பல்கலை. துணைவேந்தருடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சனிக்கிழமை சந்தித்து பாசுமதி நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினா்.

Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சனிக்கிழமை சந்தித்து பாசுமதி நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினா்.

சிதம்பரம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளான அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வி.எம்.சேகா், ரங்கநாயகி, நடராஜன், பனை தொழில்நுட்ப வல்லுநா் குமரிநம்பி உள்ளிட்டோா்

துணைவேந்தா் ராம.கதிரேசனை சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகள்,

பணப் பயிரான பாசுமதி அரிசி ரக நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினா். சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் பல்கலைக்கழக வேளாண் துறை உதவியுடன் பாசுமதி அரிசி ரக நெல்பயிா் சாகுபடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பல்கலைக்கழக வேளாண்மைத் துறை உறுதுணையாகச் செயல்படும் என துணைவேந்தா் ராம.கதிரேசன் உறுதியளித்தாா். இந்தச் சந்திப்பின்போது வேளாண் துறை இணைப் பேராசிரியா் டி.ராஜ்பிரவீன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.