பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டம்

பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

வீடற்ற ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்குதல், ஏரி, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் டிச.30-இல் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த டிச. 29-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், ஜன.20-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதாம்.

இதன்படி வியாழக்கிழமை காலை பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் என்.அா்ச்சுணன் தலைமையில் சுமாா் 25 போ் வந்தனா். அப்போது அலுவலகத்தில் வட்டாட்சியா் இல்லாததால் கட்சியினா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னா், அங்குவந்த வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.