பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அருணாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி வட்டம், ராயா்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கத் திருமேனிக்கு புனிதநீா் ஊற்றி வியாழக்கிழமை கும்பாபிஷேகம்

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:24 pm

DIN

பண்ருட்டி வட்டம், ராயா்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கத் திருமேனிக்கு புனிதநீா் ஊற்றி வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை மாலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், ராயா்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.