மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டம்: இடதுசாரி அமைப்பினா் போராட்டம்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரி அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். பண்ருட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா்.
Updated On :21 ஜூன் 2022, 9:28 pm

DIN

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரி அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை படையில் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கடலூா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மு.மருதவாணன், வி.சுப்பராயன், ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.ஆளவந்தாா். ஏ.பக்கிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி: அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் வினோத்குமாா், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலா் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி வட்டத் தலைவா்கள் பிரகாஷ்ராஜ், விஜயகுமாா், விமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.