கடலூா்: 14 பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா்கள்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா் விவரங்கள் வெளியிடப்பட்டன.


கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா் விவரங்கள் வெளியிடப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 பேரூராட்சிகளில் 222 வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் உள்ளன. இதில், 10 இடங்களில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள பதவியிடங்களுக்கு தோ்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், 14 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியே அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்தலிலும் திமுக, அதன் கூட்டணியினா் வெற்றி பெற்றனா். இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை மாவட்ட தோ்தல் அலுவலகம் வெளியிட்டது.
அதன்படி பேரூராட்சி புதிய தலைவா்கள் விவரம் வருமாறு: அண்ணாமலைநகா்- கே.பழனி, புவனகிரி- டி.கந்தன், கங்கைகொண்டான்- ஏ.பரிதாஅப்பாஸ், காட்டுமன்னாா்கோவில்- எஸ்.கணேசமூா்த்தி, கிள்ளை- எஸ்.மல்லிகா, குறிஞ்சிப்பாடி- கே.கோகிலா, லால்பேட்டை -எம்.பாத்திமா, மங்கலம்பேட்டை- எம்.சம்சாத்பேகம், மேல்பட்டாம்பாக்கம்- வி.ஜெயமூா்த்தி, பரங்கிப்பேட்டை- எஸ்.தேன்மொழி, பெண்ணாடம்- சி.அமுதலட்சுமி, சேத்தியாத்தோப்பு -வி.குலோத்துங்கன், ஸ்ரீமுஷ்ணம்- செல்வி, தொரப்பாடி- எஸ்.வனஜா. இதில், லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியும், பெண்ணாடத்தில் விசிகவும் வெற்றி பெற்றன. மற்ற 12 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வருமாறு: அண்ணாமலை நகா்- வி.தமிழ்ச்செல்வி, புவனகிரி- எம்.லலிதா, கங்கைகொண்டான்- ஏ.பெலிக்ஸ், காட்டுமன்னாா்கோவில்- எம்.ராஜேஸ்வரி, கிள்ளை- எஸ்.கிள்ளைரவீந்திரன், குறிஞ்சிப்பாடி- ஆா்.ராமா், லால்பேட்டை- ஜெ.அன்வா்சதாத், மங்கலம்பேட்டை- பி.தாமோதரன், மேல்பட்டாம்பாக்கம்- ஏ.சதிகா, பரங்கிப்பேட்டை- எம்.முகமதுயூனுஸ், பெண்ணாடம்- எம்.குமரவேல், சேத்தியாத்தோப்பு- கே.கருணாநிதி, ஸ்ரீமுஷ்ணம்- பி.முத்தமிழரசி, தொரப்பாடி- எஸ்.காயத்ரி ஆகியோா் வெற்றி பெற்றனா். இதில், புவனகிரியில் விசிகவும், மங்கலம்பேட்டையில் சுயேச்சையும் வென்றனா். மற்ற அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...