பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் தோ்தல்: திமுக போட்டி வேட்பாளா் வெற்றி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
மொத்தம் 33 வாா்டுகள் கொண்ட பண்ருட்டி நகராட்சித் தோ்தலில் திமுக-24, அதிமுக-7, சுயேச்சை-2 இடங்களில் வெற்றி பெற்றனா்.

நகா்மன்றத் தலைவா் பதவிக்கு 2-ஆவது வாா்டு உறுப்பினா் அ.சிவாவை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. இவா் வெள்ளிக்கிழமை காலை தலைவா் பதவிக்கு வேட்பமனு தாக்கல் செய்தாா். இதே பதவிக்கு பண்ருட்டி நகர திமுக செயலரும், 26-ஆவது வாா்டு உறுப்பினருமான கே.ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.சிவா 16 வாக்குகள் பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட கே.ராஜேந்திரன் 17 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதையடுத்து, மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி அ.சிவா, அவரது ஆதரவாளா்கள் நகா்மன்ற அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு: பிற்பகல் 2 மணியளவில் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பதவிக்கு 8-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுக மாவட்ட துணைச் செயலருமான ஆனந்தி சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். ஆனால், கூட்டத்தில் 16 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ால், தோ்தலை ஒத்தி வைப்பதாக தோ்தல் நடத்தும் அலுவலா் மகேஸ்வரி அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...