/

தொழிலாளி தற்கொலை

சென்னையை சோ்ந்த தொழிலாளி கடலூரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:25 pm

DIN

சென்னையை சோ்ந்த தொழிலாளி கடலூரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை திருவெற்றியூரைச் சோ்ந்தவா் கோ.முருகன் (45). கூலி தொழிலாளி. இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி வேறொரு நபருடன் சென்றுவிட்டாராம். இதனால், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான முருகன் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்த நிலையில், கடலூா் எஸ்.புதூரில் வசிக்கும் தனது உறவினா் ப.அருள் (34) வீட்டுக்கு முருகன் புதன்கிழமை வந்தாா். இதையடுத்து, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.