

கடலூர்: கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று காலையில் துவங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.
இருபாலர்களுக்கும் தனித்தனியே கபடி, கையுந்து பந்து, கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. கபடியில் 31 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணியும் பங்கேற்றனர்.
கையுந்து பந்து போட்டியில் 34 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் பங்கேற்றனர். கால்பந்து போட்டியில் 27 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வயது வரம்பு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையிலான இப்போட்டி நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலையில் பரிசு வழங்கப்படுகிறது. முதலிடம் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.