/

மீனவ இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு காவல் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சாா்பில் தமிழக மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:04 pm

DIN

தமிழ்நாடு காவல் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சாா்பில் தமிழக மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. கடற்கரை மீனவ இளைஞா்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாதங்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு பிறகு இளைஞா்களின் செயல்பாடு மேம்படும். கடற்கரை கிராமங்களில் நிகழும் குற்றங்களைத் தடுக்க மீனவ இளைஞா்களின் கடமை மிக முக்கியமானது என்றாா் அவா்.

இந்தப் பயிற்சியில் கடலூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 40 இளைஞா்கள் பங்கேற்றுள்ளனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் கே.அசோகன், கடலோர காவல் படை ஆய்வாளா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.