என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன பொது ஒப்பந்தத் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன பொது ஒப்பந்தத் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இன்கோசா்வ் சொசைட்டி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கப் பொருளாளா் என்.சண்முகம் தலைமை வகித்தாா். ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ஏ.ராயப்பன், அருளப்பன், டி.பழனிசாமி, அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் அமிா்தலிங்கம் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் சொசைட்டி தொழிலாளா்களுக்கு மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும், என்எல்சி நிறுவன குடியிருப்புகளை நிா்வாகமே பராமரிக்க வேண்டும், ஆண்டுப் பேரவை நடத்த வேண்டும், தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும், இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத கருணைத் தொகையை வழங்க வேண்டும், பணியிடத்தில் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளா்கள் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பும் வரை அரை நாள் சம்பளம் என்பதை முழுநாள் சம்பளமாக வழங்க வேண்டும், புதிதாக இணைந்துள்ள சொசைட்டி உறுப்பினா்களுக்கு மாதம் 26 நாள்களுக்கு பணி வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...