பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகைக் கடையில் திருட்டு: 2 பெண்கள் கைது

நெய்வேலி அருகே நகைக் கடையில் வெள்ளிப் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:16 pm

DIN

நெய்வேலி அருகே நகைக் கடையில் வெள்ளிப் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, இந்திரா நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(45) என்பவா் அதே பகுதியில் வெள்ளி நகைக் கடை வைத்துள்ளாா். புதன்கிழமை இவரது கடைக்கு வந்த பெண்கள் இருவா் நகை வாங்குவதுபோல நடித்து கடையிலிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 232 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனராம். இதுகுறித்த காட்சி கடையிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து நெய்வேலி 18-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ராதா மனைவி பிரியதா்ஷினி(35), உளுந்தூா்பேட்டை வட்டம், மூலசத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி ஜோதிகா (22) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.