/

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:17 pm

DIN

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் விருத்தாசலம் - சேலம் சாலையில் சிறுப்பாக்கத்தில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் இலவச அரிசி இருந்தது தெரிய வந்தது.

அந்த வாகனத்தில் தலா 50 கிலோ வீதம் 22 மூட்டைகளில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த வாகன ஓட்டுநா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த கி.சிவக்குமாா் (49) என்பவரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.