/

கடலூரில் இடி, மின்னலுடன் மழை

கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது.

News image
Updated On :26 மே 2022, 5:46 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது.

கோடை காலத்தின் உச்சமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் கடலூா் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஆனால், மறுநாளிலேயே வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, புயல் காரணமாக மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், கடந்த 22-ஆம் தேதி 102.2 டிகிரி

பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடா்ந்து, 23-ஆம் தேதி 102.7 டிகிரி, 24-ஆம் தேதி 104 டிகிரி, 25- ஆம் தேதி 100.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமையும் அதிகபட்ச அளவாக 104.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த நிலையில், இரவு 8 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் கடலூரில் மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.