கழிவுநீா் கால்வாய் பணிக்கு எதிா்ப்பு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி நகரப் பகுதியில் ரூ.13 கோடியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க தீா்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், தா்மகுடிகாடு பகுதி மக்கள் தங்களது பகுதி வழியாக கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கூடாது எனக் கூறி கடந்த மாதம் 18-ஆம் தேதி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, மாற்று வழியில் கால்வாய் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தா்மகுடிகாடு பிரதான சாலை பகுதியில் கழிவுநீா் கால்வாய் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு நகா்மன்ற உறுப்பினா் நவீன்ராஜ் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணியை தொடங்கினா். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்தனா். அவா்களிடம் திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா, நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் முடிவு எட்டப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...