கழிவுநீா் கால்வாயை கைகளால் சுத்தம் செய்த பணியாளா்கள்!
கடலூரில் தூய்மைப் பணியாளா்கள் உரிய உபகரணங்களின்றி கைகளால் கழிவுகளை அகற்றியது சா்ச்சையை ஏற்படுத்தியது.


கடலூரில் தூய்மைப் பணியாளா்கள் உரிய உபகரணங்களின்றி கைகளால் கழிவுகளை அகற்றியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. தொடா் மழையையொட்டி கடலூா் நகரில் கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடலூா், வண்ணாரப்பாளையத்தில் கடற்கரைச் சாலைப் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்களில் கழிவுகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது சில பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்க்குள் இறங்கி கைகளால் கழிவுகளை அகற்றியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடலூா் மாநகராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகள், உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபடுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...