ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘தயாா் நிலையில் தீயணைப்புத் துறை’

மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளதாக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் பி.கே.ரவி கூறினாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 8:52 pm

DIN

மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளதாக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் பி.கே.ரவி கூறினாா்.

கடலூா் தீயணைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வுசெய்த அவா், மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள ரப்பா் படகுகள், மீட்பு உபகரணங்களை பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் மழை, வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். வடகிழக்கு பருவ மழை முடியும் வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் சிக்குவோரை மீட்பதற்கான உபகரணங்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட தன்னாா்வலா்கள் 500 போ் தயாராக உள்ளனா். கடலூா் மாவட்டத்தில் தீயணைப்பு வீரா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,234 போ் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, கடலூா் தொழில்பேட்டையில் பி.கே.ரவி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் கே.குமாா், உதவி மாவட்ட அலுவலா் ஆறுமுகம், தொழில்பேட்டை நிலைய அலுவலா் வீரபாகு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.