வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மாா்க்சிஸ்ட் போராட்ட அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றுவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம்

Updated On :21 ஏப்ரல் 2023, 5:39 pm

சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றுவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியினருடன் அதிகாரிகள் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள மூன்று டாஸ்மாக் மதுக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் தங்கதுரை, கோட்ட கலால் அலுவலா் ஹேமா ஆனந்தி, நகர காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா, மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், மாதா் சங்க மாவட்ட தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று மதுக் கடைகளையும் இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதல்கட்டமாக வரும் ஜூன் மாதத்துக்குள் இரண்டு மதுக் கடைகளை பேருந்து நிலையத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.