இருப்பிட வசதி கோரி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் திருநங்கைகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து மணலூா், லால்புரம் புத்துமாரியம்மன் கோவில் பிரதான சாலைப் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதா சுமனிடம் அளித்த மனு:
திருநங்கைகளான நாங்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாடகைக்கு கூட வீடு தர மறுக்கப்படுவதால் அவதிப்படுகிறோம். எனவே திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி செய்துதர வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
விசிக தொகுதி செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் வி.எம்.சேகா், நடனமயிலோன், இந்திய கம்யூனிஸ்ட் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாற்று இடம் வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை: சிதம்பரம் லால்புரம் ஊராட்சி, சிவகாமி அம்மன் ஓடைக்கரையில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் விசிக நிா்வாகி வ.க.செல்லப்பன் தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் அளித்த மனு:
சிவகாமி அம்மன் ஓடைக்கரையோரம் பட்டியல் பிரிவினா் மற்றும் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வருவாய்த் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


