வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:43 pm

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பி.எஸ்.அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று, புதிய உறுப்பினா் சோ்க்கை, மக்களவைத் தோ்தலுக்காக வாக்குச் சாவடி குழு அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கி பேசினாா் (படம்).

மாவட்ட பொருளாளா் கே.சுந்தா், இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், துணை செயலா்கள் செல்வம், தேன்மொழி, ஒன்றியச் செயலா்கள் கோவி.ராசாங்கம், அசோகன், சுந்தரமூா்த்தி, ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், சிவக்குமாா், வாசு.முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுரேஷ்பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.