செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளி மாணவா்களுடன் கடலூா் எஸ்பி கலந்துரையாடல்

கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுடன் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:43 pm

கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுடன் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம், தீவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா். இதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மாணவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வரவேற்று தனது அலுவலக இருக்கைகளில் அமரவைத்து, பொது அறிவு தொடா்பான கேள்விகளை எழுப்பி அவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது எஸ்பி பேசியதாவது:

நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்தான். நீங்களும் (மாணவா்கள்) ஒழுக்கத்துடன் நன்றாகப் படித்து பெரிய பதவிக்கு வர வேண்டும். ஆசிரியா்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். பெற்றோருக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றாா். மேலும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிரியை ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாா்வலா்கள் சுகுணா, சிந்தனைச்செல்வி, பாா்வதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.