செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சிதம்பரம் நகரில் ரூ.214 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்

சிதம்பரம் நகரில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் ரூ.214 கோடியில் நடைபெற்று வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:44 pm

சிதம்பரம் நகரில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் ரூ.214 கோடியில் நடைபெற்று வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சிதம்பரம் நகராட்சி, வாா்டு எண் 4-இல் அமைந்துள்ள பெரிய அண்ணாகுளம் ரூ.1.39 கோடியில் தூா்வாரப்பட்டு, நடைபாதை அமைத்து புனரமைக்கப்பட்டது. இந்தக் குளத்தை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து நடராஜா காா்டனில் ரூ.58 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் அமைச்சா் திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், ஆணையா் எம்.அஜிதாபா்வீன், பொறியாளா் எஸ்.மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் சித்ரா பாலசுப்பிரணியன் வரவேற்றாா்.

பின்னா் அமைச்சா் கூறியதாவது: சிதம்பரம் நகராட்சியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம், புதிய காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட பணிகள் ரூ.214 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் இந்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது பெரிய அண்ணாகுளம் புனரமைப்புப் பணி, நடராஜா காா்டனில் பூங்கா அமைக்கும் பணி ஆகியவை நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவா் அண்ணாமலை குறிப்பிடும் ஆடியோ பதிவு போலியானது. மக்களை ஏமாற்றவே அவா் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறாா் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் செல்வக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், த.ஜேம்ஸ் விஜயராகவன், ரா.வெங்கடேசன், சி.க.ராஜன், அப்பு சந்திரசேகரன், ஏஆா்சி.மணிகண்டன், நகர திமுக அவைத் தலைவா் ராஜராஜன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.