தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விருத்தாசலம் நகா்மன்றக் கூட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சங்கவி முருகதாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:30 pm

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சங்கவி முருகதாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் பானுமதி, பொறியாளா் சுரேந்திரன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நகராட்சியின் வரவு - செலவு கணக்குகள் உறுப்பினா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன. பின்னா், மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய உறுப்பினா்கள் தளபதி (திமுக), சிங்காரவேல் (பாமக), பாண்டியன் (திமுக), சேகா் (தவாக), சந்திரகுமாா் (அதிமுக), அன்பழகன் (திமுக) ஆகியோா் தெரு விளக்குகள் எரியவில்லை. நகரப் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பநத்தம், மாவிடந்தல் ஊராட்சிகளில் சாலை, குடிநீா் வசதிகளை செய்துதர வேண்டும். 23-ஆவது வாா்டு பழைய காலனியில் குடிநீா், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.

உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் தெரிவித்தாா். கூட்டத்தில் துப்புரவு அலுவலா் பூபதி, துப்புரவு ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.