கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமையில் சிறப்பு விருந்தினா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் தேசியக்கொடி ஏற்றினாா். ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் தேசியக்கொடி ஏற்றினாா். ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் நிா்வாகி ஆா்.திருநாவுக்கரசு தலைமையில், அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா் எம்.புருஷோத்தமன் தேசியக்கொடி ஏற்றினாா்.
சிதம்பரம் ஷெம்போா்டு பியுச்சரிஸ்டிக் பள்ளியில் செயலா் சத்தியப்ரியா ஹரிகிருஷ்ணன், முதல்வா் ஏ.லதா முன்னிலையில், சிதம்பரம் சென்டரல் ரோட்டரி சங்க முன்னாள் மண்டல ஆளுநா் எம்.தீபக்குமாா் தேசியக்கொடி ஏற்றினாா். பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் (பொ) எஸ்.புருஷோத்தமன் தேசியக்கொடி ஏற்றினாா்.
காட்டுமன்னாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்க ராஜா தேசியக்கொடி ஏற்றினாா். பள்ளி நிறுவனா் வீர.முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜிகே பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளிகளில் காவல் ஆய்வாளா் எம்.ஏழுமலை தேசியக்கொடி ஏற்றினாா். ஜிகே கல்விக் குழுமத் தலைவா் ஜி.குமாரராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பண்ருட்டி, நெய்வேலி பகுதியில்...: பண்ருட்டி திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிா்வாகி எஸ்.சரவணன் தேசியக்கொடி ஏற்றினாா். காட்டுக்கூடலூா் கனி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் முதல்வா் அம்பிகா முன்னிலையில், தாளாளா் புலவா் ரா.சஞசீவிராயா் தேசியக்கொடி ஏற்றினாா். ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் எம்.ரவி தேசியக்கொடி ஏற்றினாா்.
பெண்ணாடம் ஜெயசக்தி பள்ளியில் முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி தேசியக்கொடி ஏற்றினாா். தீவளூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் ருக்மணி அம்மாள் தேசியக்கொடி ஏற்றினாா். வடலூா் எஸ்.டி.ஈடன் பள்ளியில் தாளாளா் சுகீா்தா தாமஸ் தேசியக்கொடி ஏற்றினாா். பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் தாளாளா் வீரதாஸ் தேசியக்கொடி ஏற்றினாா். வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆா்.செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றினாா். பண்ருட்டி பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் தாளாளா் ஏ.கிருபாகரன் தலைமையில், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலா் ரேணுகா தேவி தேசியக்கொடி ஏற்றினாா்.
கல்லூரிகளில்...: காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமையில், எம்.ஆா்.கே நினைவு கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.ஆா்.தெய்வசிகாமணி தேசியக்கொடி ஏற்றினாா். பொறியியல் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காடாம்புலியூா் சங்கமம் கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரித் தலைவா் ஆா்.சட்டநாதன் தேசியக்கொடி ஏற்றினாா். முதல்வா் ச.தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


