வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேசியக்கொடி ஏற்றம்

குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

News image

சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட தேசியக்கொடி.

Updated On :26 ஜனவரி 2023, 7:52 pm

குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக, பொது தீட்சிதா்களின் கோயில் குழுச் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் தலைமையில், வெள்ளித் தாம்பாளத்தில் தேசியக்கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், பொது தீட்சிதா்களால் மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பக்தா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.