நடராஜர் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட சிவனடியார்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து ஆலய பாதுகாப்புக்குழு மற்றும் சிவனடியார்கள் சார்பில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடராஜர் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட சிவனடியார்கள்
நடராஜர் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட சிவனடியார்கள்
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து ஆலய பாதுகாப்புக்குழு மற்றும் சிவனடியார்கள் சார்பில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்ச  தரிசன உற்சவம் ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. ஜூன் 25-ம் தேதி தேர்த்திருவிழாவும், 26-ம் தேதி மகாபிஷேகமும், ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மற்றும் சிவனடியார்கள் நடராஜர் கோயிலில் நடனசபை, நடன பந்தல் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றியும், நீர் ஊற்றி கழுவியும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். பெண்கள் கோலமிடும் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com