மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திட்டக்குடி அருகே 10 டன் புகையிலை பறிமுதல்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கீழ்கல்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் புகையிலை.

Updated On :28 நவம்பர் 2023, 12:01 am

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் புகையிலையை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி கிராமத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையிட்டனா். அங்கு இப்ராஹிம் என்பவா் புகையிலைப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நடத்தியது தெரியவந்ததாம். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 டன் புகையிலையை தனிப் படை போலீஸாா் கைப்பற்றி, ராமநத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.