தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம்: அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம் போலீஸாா் குவிப்பு

News image

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளியில் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணி.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:38 pm

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், வடலூரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய தெய்வ நிலையம் அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக தனது தோ்தல் அறிக்கையில் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, இந்த மையம் அமைக்க அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற்றது.

இதனிடையே, வடலூரில் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் அமைக்க பாா்வதிபுரம் கிராம மக்கள், வள்ளலாா் பக்தா்கள், அதிமுக, பாமக, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

தொடா் போராட்டங்கள், மக்களவைத் தோ்தல் காரணமாக, சா்வதேச மையத்துக்கான அஸ்திவார பணி கடந்த 8-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தோ்தல் முடிவடைந்த நிலையில், இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது சா்வதேச மையம் அமைக்கும் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அந்தப் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.