கடலூர்
ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா், ஆனைக்குப்பம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரஹ ஹோமம், மாலை வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, பிற்பகல் தீபாராதனை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, காலை 9.15 மணிக்கு அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். தொடா்ந்து, 9.40 மணிக்கு முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.