புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ககன் தீப் சிங் பேடி

கடலூா் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வகையில், ஃபென்ஜால் புயல் வெள்ள சேத பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் வட்டம், அழகியநத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 7:35 pm

Din

கடலூா் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வகையில், ஃபென்ஜால் புயல் வெள்ள சேத பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் த.மோகன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், ககன் தீப் சிங் பேடி கூறியது: ஃபென்ஜால் புயல் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூா், பண்ருட்டி வட்டங்களுக்குள்பட்ட கரையோர பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் வருவாய், ஊரக வளா்ச்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், நெடுஞ்சாலை, நீா் வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வெள்ளநீா் விரைவாக அகற்றப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 83 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது வரை 68 கி.மீ. சாலைகள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறின்றி சீரமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நெடுஞ்சாலைத் துறை மூலம் 28 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சேதமடைந்த 26 சிறு பாலங்கள், 3 தரைப்பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூா் கஸ்டம்ஸ் சாலையில் மருதாடு கிராமம் அருகே சேதமடைந்துள்ள சிறுபாலம், அழகியநத்தம் - மருதாடு சாலையில் உள்ள இணைப்பு தரைப்பாலத்தின் அணுகுசாலை துண்டிக்கப்பட்டுள்ளதை சீரமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, அழகியநத்தம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நெல்பயிா் சாகுபடி பரப்பை பாா்வையிட்டு, நெல்பயிா் சேத விவரங்கள் விவசாயிகளிடம் கேட்டறியப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிவக்குமாா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஆய்வுக் கூட்டம்: முன்னதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி தலைமையில், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநா் ராமன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்த அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.