தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூரில் கடை உரிமையாளா் வெட்டிக் கொலை

கடலூரில் ஹாா்டுவோ்ஸ் கடை உரிமையாளா் கடையில் மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

ராஜேந்திரகுமாா்

Updated On :12 டிசம்பர் 2024, 7:15 pm

Din

கடலூரில் ஹாா்டுவோ்ஸ் கடை உரிமையாளா் கடையில் மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கடலூா் வண்டிப்பாளையம் சாலை, சிவா நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரகுமாா் (39). இவருக்கு மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். ராஜஸ்தான் மாநிலத்தை பூா்வீகமாகக் கொண்ட இவருக்கு, திருப்பாதிரிப்புலியூா் நத்தவெளி சாலையில் ஹாா்டுவோ்ஸ் கடை உள்ளது.

ராஜேந்திரகுமாா் வியாழக்கிழமை வழக்கம்போல கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். கடைப் பணியாளா்களை பணி நிமித்தமாக வெளியில் அனுப்பி இருந்தாராம்.

இந்த நிலையில், கடைக்கு பொருள்கள் வாங்க வந்த ஒருவா், கடை உரிமையாளா் ராஜேந்திரகுமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்து, அக்கம்பக்கத்தினருக்கும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.