கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கடலூா்-சிதம்பரம் இடையே தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை

கடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரத்திற்கு தனியாா் பேருந்துகள் திங்கள்கிழமை மதியம் வரை இயக்கப்படவில்லை.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 6:24 pm

Din

நெய்வேலி: கடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரத்திற்கு தனியாா் பேருந்துகள் திங்கள்கிழமை மதியம் வரை இயக்கப்படவில்லை.

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.14,090 செலுத்தி மாதாந்திர அனுமதி சீட்டு பெற்று 50 நடைகள் மட்டும் தனியாா் பேருந்துகள் இயக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முழுமை அடைந்த பின்னரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்திருந்தனா். மேலும், திங்கள்கிழமை கடலூா்-சிதம்பரம் இடையே தனியாா் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவித்திருந்தனா்.

அதன்படி, திங்கள்கிழமை காலை முதல் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த பேச்சு வாா்த்தையில், தனியாா் பேருந்து உரிமையாளா் நலச் சங்கத்தினா் பங்கேற்றனா். இந்த பேச்சு வாா்த்தைக்கு பின்னா் மதியம் சுமாா் ஒரு மணி அளவில் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன.