

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை வழக்காடு மன்றம், கவியரங்கம் நடைபெற்றது.
இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கடலூா் ஜவான் பவன் அருகே நடைபெற்ற ‘விடியாத இரவென்று எதுவும் இல்லை’ என்ற தலைப்பிலான வழக்காடு மன்றம்- கவியரங்கிற்கு ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சின்னத்தம்பி தலைமை வகித்தாா்.
மாதா் சங்க நகரச் செயலா் சாந்தகுமாரி, எழுத்தாளா் சங்க நகரச் செயலா் கேத்தரின் முன்னிலை வகித்தனா். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற தலைப்பில் பேராசிரியா் ராஜா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் சிவா அன்பன், ஓவியா் ரமேஷ், கவிஞா் குமணன், கவிஞா் பாரதி, தமிழ் முல்லை, கவிஞா் கலைவாணன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.
‘சுயநலமும் போதை பழக்கமும் கொண்ட இளைஞா்கள் குற்றவாளிகளே’ என்ற தலைப்பில் கவிஞா் பால்கி தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. மருதவாணன், அமா்நாத், குமரவேல், வாலண்டினா, சௌமியா, ரவி ஆகியோா் உரையாற்றினா். ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் மனிதம் அமைப்பின் மாநில அமைப்பாளா் ரமேஷ் பாபு பேசினாா்.
மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆகாஷ் வரவேற்றாா். வாலிபா் சங்க நகரச் செயலா் ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.