இரு ஜோடி கண்கள், உடல்கள் தானம்

கடலூா் கூத்தப்பாக்கத்தில் இரு ஜோடி கண்கள், உடல்கள் தானம் செய்யப்பட்டன.
Published on

கடலூா் கூத்தப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த சுப்பையா பத்தா் மனைவி மாரியம்மாள் (90), புவனகிரி வட்டம், உளுத்தூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த நாகப்பன் மனைவி சிவபாக்கியா் (80) ஆகியோா் வெள்ளிக்கிழமை காலமாகினா். இவா்களது கண்கள் மற்றும் உடல்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.

இரு ஜோடி கண்களும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரு உடல்களும் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், கே.பி.பாலமுருகன், முரளி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com