கடலூா் எஸ்பி.யிடம் அதிமுகவினா் மனு
கடலூா் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராமனிடம், கிழக்கு மாவட்ட அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


கடலூா் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராமனிடம், கிழக்கு மாவட்ட அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கட்சியின் மீனவா் பேரவை மாநில துணைத் தலைவா் தங்கமணி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூா் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளதால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அதிமுக நிா்வாகிகள் இருவா் கொலை செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்த கூலிப்படையினருடன், கடலூா் மாவட்ட இளைஞா்கள் சோ்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். எனவே, போதை பழக்கத்தை தடுக்க வேண்டும். உரிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரிக்குப்பம், கோண்டூா் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். இதில், நிா்வாகிகள் மாதவன், கந்தன், வெங்கட்ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...