கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விருத்தாசலம் ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த மனித கால்

விருத்தாசலம் ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த மனித கால்

News image
Updated On :7 ஜூன் 2024, 7:08 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த மனித காலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலத்தில் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் நடைமேடை எண் 1-இல் உள்ள தண்டவாளத்தின் நடுவே மனித கால் அடிபட்டு சிதைந்த நிலையில் கிடந்தது.

தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளா் சித்ரா மற்றும் போலீஸாா் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். பின்னா், காலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு கால் சின்னசேலம் அருகே கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சேலத்தில் இருந்து விருத்தாசலம் வந்து சென்ற ரயிலில் ஒருவா் அடிபட்ட நிலையில், அவரின் கால்கள் ரயில் சக்கரத்திலேயே சிக்கி விருத்தாசலம் ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அந்த நபா் இறந்திருக்கலாம் எனவும், அவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.