ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை: இளைஞருக்கு கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

News image
Updated On :25 ஜூன் 2024, 10:50 pm

Din

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருத்தாசலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த சிறுமி விடுதியில் தங்கி 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். 7.3.2023 அன்று தாயிடம் கைப்பேசியில் பேச வேண்மென உதவி கேட்ட அந்தச் சிறுமியை ஸ்ரீமுஷ்ணம் வட்டம், முடிகண்டநல்லூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிவமூா்த்தி மகன் ஜீவா (24) பைக்கில் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், அதை கைப்பேசியில் பதிவு செய்து, மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் வேப்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டக்குடி தனிப்படை போலீஸாா் ஜீவாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஜீவாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.