கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஒன்றியக் குழுக் கூட்டம்: அடிப்படை வசதிகள் கோரி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும் என ஒன்றியக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

News image

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவா் தெய்வ பக்கிரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.

Updated On :5 மார்ச் 2024, 7:41 pm

நெய்வேலி: கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும் என ஒன்றியக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். கடலூா் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் தெய்வ பக்கிரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிம், பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் சசிகலா தீா்மானம் வாசித்தாா். கூட்டத்தில், உறுப்பினா்கள் பேசியதாவது: ஞானசெளந்தரிதுரை: பெரிய காரைக்காடு, செம்மாங்குப்பம் பகுதியில் சேதமடைந்த இரண்டு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால், அந்தப் பகுதியில் புதிய குடிநீா் தொட்டி அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புதிதாக குடிநீா் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிப்காட்டில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். முரளி: அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.எஸ்.ஆா். மதிவாணன்: மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறுகள், நத்தப்பட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திருமலை நகா், திருநகா் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். கிரிஜா செந்தில்குமாா்: பாதிரிக்குப்பம் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. தெய்வ பக்கிரி(தலைவா்): ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றித் தரப்படும் என்றாா். முன்னதாக, 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.