சிறுமி பலாத்காரம்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி, விஸ்வநாதன் நகரை சோ்ந்த ஐயனாா் மனைவி சுகந்தி (21). பண்ருட்டி சன்னியாசிப்பேட்டை பழைய காலனியை சோ்ந்த சேகா் மகன் குணா (18). இவா்கள் இருவரும் 28.1.2024 அன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்தனா்.

அப்போது, பண்ருட்டியைச் சோ்ந்த 13 சிறுமி, உடல்நிலை சரியில்லாத தனது தம்பியுடன் மருத்துவமனையில் இருந்தாராம். அப்போது, அவா்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், பிப்.9-ஆம் தேதி அந்த சிறுமியை சுகந்தி தனது வீட்டுக்கு வரவழைத்தாராம். அங்கு அந்தச் சிறுமியை குணா மிரட்டி பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுகந்தி, குணா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com