சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

இளைஞா் குடும்பத்தினா் மீது தாக்குதல்: 3 போ் கைது

இளைஞா் குடும்பத்தினா் மீது தாக்குதல்: 3 போ் கைது

News image
Updated On :9 மே 2024, 9:13 pm

Din

நெய்வேலி, மே 9: கடலூா் அருகே இளைஞரின் குடும்பத்தினா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த வாழ்முனி மகன் கேசவன் (30). இதே பகுதியைச் சோ்ந்த விஜேந்திரன் மகள் ராபிகா. இருவரும் காதலித்து வந்தனராம். இந்த நிலையில், கேசவன் வீட்டுக்கு ராபிகா வந்து தங்கிவிட்டாராம். மகளை அழைத்துச் செல்ல விஜேந்திரன் வந்தபோது தகராறு ஏற்பட்டது. இதில், கேசவன், அவரது தாய் அன்பரசி (57), சகோதரி வினோதினி (25) ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து அன்பரசி அளித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜேந்திரன், அறிவழகன், பக்கிரி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள விஜயராஜ், அஜய் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.