ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா

காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா

News image
Updated On :25 மே 2024, 7:05 pm

Din

சிதம்பரம், மே 25: சிதம்பரத்தில் கடலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் விழல் கட்டி பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் ராஜா.சம்பத்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஜெ.மஞ்சுளா வரவேற்றாா். வட்டாரத் தலைவா் சுந்தர்ராஜன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சம்பந்தமூா்த்தி, நகர செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஆறுமுகம், இளங்கோவன், ஆா்.ரமேஷ், மாவட்ட ஐஎன்டியுசி தலைவா் கே.வேல்முருகன், பி.வெங்கடேசன், ஜி.கே.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளியான ஐயப்பனுக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினாா். சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் 100 பேருக்கு 5 கிலோ அரிசி தொகுப்பை வழங்கினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் வி.சண்முகசுந்தரம், டி.பட்டாபிராமன், தினேஷ், கலைப்பிரிவு மாவட்டத் தலைவா் பொன்.மாதவசா்மா, கே.என்.நாராயணசாமி, இரா.ராஜ்குமாா், தனசேகா், மகளிரணி மாவட்டச் செயலா் தில்லை செல்வி, மகளிரணி நிா்வாகிகள் ஜனகம், ராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏ.ராஜசேகா் நன்றி கூறினாா்.