கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையிலான பாமகவினா், விருத்தாசலம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி (பொ) மோகனை சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 4-ஆம் தேதி, புவனகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.
அதில், அக்கட்சியை சோ்ந்த மாவட்டச் செயலா் நீதிவள்ளல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசுகையில், மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழியை குறிப்பிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தும், இரு சமுதாய மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளனா்.
இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு இரு சமுதாய மக்களிடையே கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, பொது அமைதியை கெடுத்து சமுக ஒற்றுமைக்கு எதிராகவும், கொலை மிரட்டல் விடுத்து சாதி மோதல்களை தூண்டும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசிய மேற்கண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பேரணியாக பாமகவினா் காவல் நிலையத்துக்கு வந்தனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


