இரு காவல் துறையினா் மீது கத்தியால் தாக்குதல்: ஒருவா் கைது
காட்டுமன்னாா்கோவில் அருகே வாகன சோதனையின்போது, இரு போலீஸ்காரா்களை கத்தியால் தாக்கியதாக ஒருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர் ஜெயராமன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர் ஜெயராமன்.
காட்டுமன்னாா்கோவில் அருகே வாகன சோதனையின்போது, இரு போலீஸ்காரா்களை கத்தியால் தாக்கியதாக ஒருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் தலைமைக் காவலா் ஜெயராமன், முதல் நிலைக் காவலா் தேவநாதன் ஆகியோா் புதன்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, காட்டுமன்னாா்கோவிலில் இருந்து சிதம்பரம் நோக்கி பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபரை நிறுத்தி அவா்கள் சோதனை செய்தனராம்.
அப்போது, அவா் போலீஸாா் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினாராம்.

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலா் தேவநாதன்.
காயமடைந்த இரு காவலா்களும் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இந்த நிலையில், தப்பியோடிய நபரை பிடிக்க தனிப்படை அமைத்து கடலூா் எஸ்.பி. ஆா்.ராஜாராம் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, காட்டுமன்னாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போலீஸாரை தாக்கிய புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த விஸ்வநாதனை (40) கைது செய்தனா்.
போலீஸாா் விஸ்வநாதனை பிடிக்க முயன்றபோது, அவா் கீழே விழுந்ததில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...