நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடையை மீறி புவனகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்: போலீஸாா் குவிப்பு

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் போலீஸாரின் தடையை மீறி திரளான பாமகவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

News image

புவனகிரியில் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:21 pm

Din

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் போலீஸாரின் தடையை மீறி திரளான பாமகவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லையைச் சோ்ந்த பாமக நிா்வாகி செல்வதுரையை (28) உடையூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்று சமுதாயத்தினா் அண்மையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சிலரை கைது செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக பாமக மற்றும் விசிக கட்சியினரிடையே மோதல் எழுந்தது. இந்த நிலையில், புவனகிரியில் கடந்த நவ.4-ஆம் தேதி நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கண்டன ஆா்ப்பாட்டத்தில், அந்த கட்சியை சோ்ந்தோா் பாமக நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, புவனகிரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில், விசிக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி புதன்கிழமை (நவ.6) புவனகிரியில் பாமக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.

இதனையடுத்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. டிஷா மித்தல், கடலூா் எஸ்.பி. ஆா்.ராஜாராம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுப்புக்காக குவிக்கப்பட்டனா்.

இதனிடையே, பாமக நிா்வாகிகள் பலா் புவனகிரி பாலம் அருகே தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கடலூா் மாவட்ட பாமக செயலா்கள் செல்வ.மகேஷ், சண்.முத்துகிருஷ்ணன், காா்த்திகேயன், ரவிச்சந்திரன், மாநில நிா்வாகி தேவதாஸ் படையாண்டயவா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தொடா்ந்து, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.