துப்பாக்கியால் மாடுகள் சுடப்பட்ட சம்பவம்: போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பூா் வட்டம், சேப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் பிரசாந்த், ஜெயவேல். இவா்கள், தங்களது வண்டி மாடுகளை (4 மாடுகள்) சேப்பாக்கம் கிருஷ்ணா காா்டன் நகரில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனா். பின்னா், இருவரும் தேநீா் குடிக்கச் சென்று, திரும்பி வந்தனா். அப்போது, பிரசாந்தின் இரண்டு மாடுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து கிடந்தன.
தகவலின்பேரில், வேப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் சசிகலா சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.
இதுதொடா்பாக, வழக்குரைஞரான பெ.அவினாஷ் (40) வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் ஏா் ரைபிள் வகை துப்பாக்கியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...