புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை: ராமதாஸ்

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:42 pm

Din

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவா் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதபடி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வேளாண் துறை சாா்பில் கணக்கெடுப்புப் பணிகளில் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவது தவறு என்றாா் அவா்.