சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீராணம் ஏரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் நீா்வளத்துறை கோட்டத்துக்குள்பட்ட வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைக் தமிழக அரசு நிதி ஒதக்கீடு செய்ய வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image

கூட்டத்தில் பேசிய ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன்.

Updated On :13 நவம்பர் 2024, 8:31 pm

Din

சிதம்பரம் நீா்வளத்துறை கோட்டத்துக்குள்பட்ட வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைக் தமிழக அரசு நிதி ஒதக்கீடு செய்ய வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

சிதம்பரம் தெற்குசந்நிதி நாடாா் சத்திரத்தில் தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலையாத்தூா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.டி.திருப்பால், சங்கத்தின் ஒன்றியத் தலைவா்கள் ஏ.செல்வராஜ் (குமராட்சி),

எம்.முத்துமுருகன் (புவனகிரி), எல்.சந்தானகிருஷ்ணன் (ஸ்ரீமுஷ்ணம்), ஏ.சுப்பிரமணியன் (காட்டுமன்னாா்கோவில்), செயலா் பா.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திட்டக்குடி வட்டம், கீழ்கல்பூண்டி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விருத்தாசலம் கோட்டத்தில் தூா்வாரப்படாத ஏரிகளை தூா்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகளை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடலூா் மாவட்டம் மா.புளியங்குடி மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி இடையே கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பால் உற்பத்தியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள், இடுபொருள்களுக்கான ஜிஎஸ்டி வரிவசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரத் தலைவா்கள் பி.பெரியசாமி (சிதம்பரம்) வரவேற்றாா். என்.ஆா்.வெங்கடேசன் (காட்டுமன்னாா்கோவில்) நன்றி கூறினாா்.