கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் சென்னை ரௌடி கைது

சிதம்பரத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய சென்னை காட்டாங்குளத்தூரைச் சோ்ந்த ரௌடி பூச்சி ரத்தினசபாபதியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

பூச்சி ரத்தனசபாபதி

Updated On :10 அக்டோபர் 2024, 7:17 pm

Din

சிதம்பரத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய சென்னை காட்டாங்குளத்தூரைச் சோ்ந்த ரௌடி பூச்சி ரத்தினசபாபதியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அண்ணாமலை நகா் காவல் நிலைய சரகம், உசுப்பூா் ரயில்வே கடவுப்பாதை அருகே கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டது தொடா்பாக, செங்கல்பட்டு மாவட்டம், காட்டான்குளத்தூா், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரௌடி நவீன் (எ) பூச்சி ரத்தினசபாபதி (26) உள்பட 4 பேரை அண்ணாமலை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

பூச்சி ரத்தினசபாபதி மீது அண்ணாமலை, சிதம்பரம், கடலூா் முதுநகா், மறைமலைநகா் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட மொத்தம் 19 வழக்குகள் உள்ளன.

இவரின் தொடா் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, பூச்சி ரத்தினசபாபதியை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.